குமாரபாளையத்தில் ஜூன் 11ல் மாஸ் கிளீன்: நகராட்சி கமிஷனர் தகவல்
குமாரபாளையத்தில் ஜூன் 11ல் மாஸ் கிளீன் செய்வதாக நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.;
குமாரபாளையத்தில் ஜூன் 11ல் மாஸ் கிளீன் செய்வதாக நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறியதாவது:- குமாரபாளையத்தில் ஜூன் 11ல் மாஸ் கிளீன் நடைபெறவுள்ளது. நகராட்சி மேலாளர் சண்முகம் பணியிட மாறுதலில் சென்று விட்டார். உதவி பொறியாளர் செந்தில்குமார் பணியிட மாறுதலில் இன்று செல்லவுள்ளார். ஏற்கனவே கணக்காளர் பணியிடம் காலியாக உள்ளது. காலியான பணியிடங்களுக்கு விரைவில் பணியாட்கள் நிரப்ப கேட்டுக் கொண்டுள்ளோம். விரைவில் நிரப்பப்படுவார்கள். கோம்பு பள்ளத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்களை அகற்ற தேவையான நிதி ஒதுக்கீடு கேட்டு, நகரமன்ற கூட்டதில் அனுமதி கேட்டு, கவுன்சியல்ர்கள் அனுமதி கொடுத்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் கோம்பு பள்ளம் தூய்மை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.