சிபிஎம் சார்பில் வெகுஜன உண்டியல் வசூல் தீவிரம்

குமாரபாளையத்தில் சி.பி.எம். சார்பில் வெகுஜன உண்டியல் வசூல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2022-01-30 11:00 GMT

குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் சி.பி.எம் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமையில் வெகுஜன உண்டியல் வசூல் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் சி.பி.எம் கட்சி சார்பில் வெகுஜன உண்டியல் வசூல் நடைபெற்றது.இது பற்றி சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் கூறியதாவது:

சி.பி.எம். கட்சி சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் வெகுஜன உண்டியல் வசூல் எனும் பெயரில், பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த வசூல் மூலம் கட்சி அலுவலக பராமரிப்பு பணிகள், ஆண்டுதோறும் செலுத்தப்படும் மின் கட்டணம்,பொதுமக்கள் சேவைக்காக செய்யப்படும் பணிகள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவைகளுக்காக செலவிடப்படும்.

மாநிலம் முழுதும் நடைபெறும் இந்த வெகுஜன உண்டியல் வசூல் அந்தந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பொறுத்து வசூல் கிடைக்கும். குமாரபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் ஓரளவு வசூல் எதிர்பார்க்கப்படும். இதுவே விருதுநகர் பகுதியில் 32 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். அங்கு அலுவலக செலவினங்கள், ஆண்டு முழுதும் பணியாளர்கள் சம்பள செலவினங்கள் உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்துவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தனேந்திரன், மணிகண்டன், வீ.மேட்டூர் கிளை செயலர் குப்புசாமி, நிர்வாகிகள் கருப்பண்ணன், பழனிச்சாமி, சிவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News