தியாகி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் கொண்டாட்டம்
குமாரபாளையம் அருகே சுதந்திர போராட்ட தியாகி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் அருகே சுதந்திர போராட்ட தியாகி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அருகே ராஜராஜன் நகரில் சுதந்திர போராட்ட தியாகி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.
இரட்டைமலை சீனிவாசன் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இரட்டைமலை சீனிவாசன் வரலாற்றை மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் தீனா, அங்கப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.