தியாகி சுப்பராமன் பிறந்த நாள்விழா மற்றும் சுதந்திர தின விழா

குமாரபாளையம் கிளை நூலகத்தில் சுதந்திர தின விழா மற்றும் சுதந்திர போராட்ட தியாகி சுப்பராமன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2024-08-15 14:00 GMT

குமாரபாளையம் கிளை நூலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி பங்கேற்றார்.

தியாகி சுப்பராமன் பிறந்த நாள்விழா மற்றும் சுதந்திர தின விழா

குமாரபாளையம் கிளை நூலகத்தில் சுதந்திர தின விழா மற்றும் சுதந்திர போராட்ட தியாகி சுப்பராமன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் கிளை நூலகத்தில் குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் விடியல் ஆரம்பம் சார்பாக சுதந்திர தின விழா அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி பங்கேற்று, தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கிளை நூலகர் மாரியாயி, வாசகர் வட்ட உறுப்பினர்கள் கோபிராவ், சம்பத்குமார், வெங்கடேஷ், கார்த்திக், சபரி, சங்கீதா, ஜெகதீஸ்வரி, பஞ்சாலை சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

அரசு உதவி பெறும் ஜே.ஜே.கே.ரங்கம்மாள் துவக்கப்பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பராமன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை செல்லம்மாள், தியாகி சுப்பராமன் குறித்து விரிவாக மாணவ, மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இது குறித்து வினாடி வினா போட்டி வைக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தங்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் தீனா, சண்முகசுந்தரம், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


குமாரபாளையம் அரசு உதவி பெறும் ஜே.ஜே.கே.என். ரங்கம்மாள் துவக்கப்பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பராமன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Similar News