மாரியம்மன் கோவில் திருவிழா: தீர்த்தக்குட ஊர்வலம்
குமாரபாளையம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.;
வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. காவேரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் இன்று நடந்தது. இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பொங்கல் வைத்து வழிபட்டனர். திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடந்தன.