குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூஜைகள் துவக்கம்

குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கின.

Update: 2022-09-09 13:45 GMT

குமாரபாளையம் பெரியமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜைகள் துவங்கியதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 

குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்றுமுன்தினம் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முதல் மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கியது.

கும்பாபிஷேக விழா நடந்ததும் அந்த ஊரில் உள்ள மற்ற கோவில் நிர்வாகிகள் அவரவர் கோவில் சார்பில் தாம்பூலம் சமர்பித்தல் வழக்கம். அதன்படி குமாரபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில் நிர்வாகிகள் தாம்பூலம் சமர்பித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

வந்திருந்த பிற கோவில் நிர்வாகிகளுக்கு பெரிய மாரியம்மன் கோவில் சார்பில் நாட்டாண்மைகாரர் முருகேசன், கவுன்சிலர் வள்ளியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பரிவட்டம் கட்டி, சிறப்பு மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News