குமாரபாளையத்தில் மனைவியை காணவில்லை: கணவர் புகார்

குமாரபாளையத்தில் மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.;

Update: 2022-06-10 13:15 GMT

பைல்படம்.

குமாரபாளையத்தில் மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை கீழ் வளவு அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் விஜயா, 47. இவரது கணவர் ராசு, 49. கூலி. இவர் ஜூன் 2ம் தேதி வேலை முடிந்து மாலை 04:00 மணிக்கு வந்து வீட்டில் பார்த்த போது மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மனைவியை கண்டுபிடித்து தரச் சொல்லி ராசு குமாரபாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

Similar News