பெண்களை ஆபாசமாக படமெடுத்த நபர் கைது
குமாரபாளையம் அருகே பெண்களை ஆபாசமாக படமெடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
பெண்களை ஆபாசமாக படமெடுத்த நபர் கைது - குமாரபாளையம் அருகே பெண்களை ஆபாசமாக படமெடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, கோனக்காடு, வீரப்பம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராஜம்மாள், 50. தட்டான்குட்டை ஊராட்சியில் 100 வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை 02:30 மணியளவில் இவரும், இவருடன் பணியாற்றும் சில பெண்களும் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஓய்வெடுத்துள்ளனர். இதனை அப்பகுதியில் உள்ள கேசவராஜ் என்பவர், பெண்களின் உடை ஒதுங்கிய நிலையில் உள்ளவாறு போட்டோ எடுத்ததால், பெண்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். நேற்றும் இதே போல் பெண்களை ஆபாசமாக போட்டோ எடுக்க, ஆத்திரமடைந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டு, கேசவராஜ் மீது புகார் கொடுத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.