குமாரபாளையத்தில் பொதுமக்களை தகாத வார்த்தையில் பேசியவர் கைது
குமாரபாளையத்தில் பொதுமக்களை தகாத வார்த்தையில் பேசி மிரட்டல் விடுத்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
குமாரபாளையம் காவல் நிலையம்.
குமாரபாளையம் காவேரி நகர் காந்தியடிகள் தெருவை சேர்ந்தவர் பெருமாள், 36. இவர் வேலைக்கு செல்லாமல் போவோர், வருவோரை தகாத வார்த்தையால் வசைபாடி வந்துள்ளார். நேற்று இரவு 9 மணியளவில் இதேபோன்று நடந்துகொண்டுள்ளார்.
இது குறித்து அதே பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி வேலுசாமி, 36, பெருமாளிடம், ஏன் இது போல் பேசி வருகிறாய்? என்று கேட்க, மேலும் வேலுச்சாமியுடன் அதே பகுதியை சேர்ந்த ராஜா, திருமூர்த்தி மற்றும் பலர் தட்டி கேட்க, பெருமாள் கத்தியை காட்டி, ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்; என்னிடம் பேசினால் குத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது பற்றி வேலுசாமி குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய போலீசார் பெருமாளை கைது செய்தனர்.