ஆதார் சேவைகளை எளிமைப் படுத்த தலைமை கோட்ட கண்காணிப்பாளருக்கு கோரிக்கை மனு

ஆதார் சேவைகளை எளிமைப் படுத்த, மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட தலைமை கோட்ட கண்காணிப்பாளருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.;

Update: 2025-04-21 13:58 GMT

ஆதார் சேவைகளை எளிமைப் படுத்த தலைமை கோட்ட கண்காணிப்பாளருக்கு கோரிக்கை மனு


ஆதார் சேவைகளை எளிமைப் படுத்த, மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட தலைமை கோட்ட கண்காணிப்பாளருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் நாமக்கல் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, நகர அமைப்பாளர் உஷா, ஒன்றிய அமைப்பாளர் மல்லிகா, ஆகியோர் தலைமை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் இந்திராவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

குமாரபாளையம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் ஆதார் சேவை மையத்தில், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் செய்வதற்காக மையத்தை நாடினால், பவானி தலைமை அஞ்சல் அலுவலகம் செல்லுங்கள் என்றும், பவானி சென்றால், இங்கு இருக்கும் நபர்களுக்கு வேலை செய்ய முடியவில்லை.நீங்கள் உங்கள் ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகம் செல்லுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, குமாரபாளையம் ஆதார் சேவை சம்பந்தமாக அனைத்து சேவைகளையும் குமாரபாளையத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் செயல்படுத்துவதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மாவட்ட அமைப்பாளர் சித்ரா கூறியதாவது:

பள்ளிபாளையம் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் மிக தொலைவில் உள்ளதால், நகரின் மையப்பகுதியான, பழைய சார்பதிவாளர் அலுவலகத்தில் செயல்பட கோரிக்கை விடுத்தோம். அதற்கு ஆவண செய்வதாக கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட துணை செயலர் மகுடேஸ்வரன், பள்ளிபாளையம் நிர்வாகி ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

படவிளக்கம் : 

ஆதார் சேவைகளை எளிமைப் படுத்த, மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, நகர அமைப்பாளர் உஷா, ஒன்றிய அமைப்பாளர் மல்லிகா, மாவட்ட துணை செயலர் மகுடேஸ்வரன், பள்ளிபாளையம் நிர்வாகி ராஜா ஆகியோர் நாமக்கல் மாவட்ட தலைமை கோட்ட கண்காணிப்பாளர் இந்திராவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Similar News