குமார பாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-ம் ஆண்டு விழா
குமாரபாளையத்தில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.;
குமார பாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஐந்தாம் ஆண்டு விழா நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5ம் ஆண்டுவிழா மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்கள், பிரசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழா குமாரபாளையத்தில் நடைபெற்றது. தாலுகா அலுவலகம் அருகே நடைபெற்ற விழாவில் மாவட்ட செயலர் காமராஜ் கட்சியின் கொடியேற்றி வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில் கட்சியின் மாவட்ட காமராஜ் பேசும்போது
நேர்மையான தேர்தல், நேர்மையான அரசியல் என்பதே எங்கள் லட்சியம். தலைவரின் வழிகாட்டுதலில் பயணித்து வெற்றியை அடைய பாடுபடுவோம். பல அரசியல் கட்சியினர் தயங்கிய போதும் குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் 14 பேர் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. வெற்றி என்பதை விட களத்தில் நிற்பதே வெற்றிதான் என்றார்.
நகரமன்ற தேர்தலில் இக்கட்சியின் சார்பில் 14 பேர் போட்டியிட்டனர். எந்த பரிசு பொருட்களும் பொதுமக்களுக்கு வழங்காமல், காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அ.தி.மு.க., பா.ஜ.க, சுயேச்சை மூவர் என 8 பேர் போட்டியிட்ட நிலையில் 17வது வார்டில் மகளிரணி செயலர் சித்ரா 83 ஓட்டுக்கள் பெற்றமைக்காகவும், மற்றும் தேர்தலில் போட்டியிட்ட மற்ற 13 பேர்களும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டனர். நிர்வாகிகள் நந்தகுமார், சிவக்குமார், மகளிரணியினர் மல்லிகா, உஷா உள்பட பலர் பங்கேற்றனர்.