மின் மாற்றியை இடம் மாற்றம் செய்ய வேண்டி, மின்வாரியத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு

குமாரபாளையம் சேலம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மின் மாற்றியை இடம் மாற்றம் செய்ய வேண்டி, மின்வாரியத்தில் மனு கொடுக்கப்பட்டது;

Update: 2025-04-05 16:56 GMT

மின் மாற்றியை இடம் மாற்றம் செய்ய

வேண்டி, மின்வாரியத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு

குமாரபாளையம் சேலம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மின் மாற்றியை இடம் மாற்றம் செய்ய வேண்டி, மின்வாரியத்தில் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் சேலம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மின் மாற்றியை இடம் மாற்றம் செய்ய வேண்டி, மின்வாரியத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது:

குமாரபாளையம் சேலம் மெயின் ரோடு, மதீனா ஸ்டோர் அருகில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ள மின்மாற்றியை இடம் மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டி, பல வருடங்களாக புகார் கொடுத்துள்ளோம். பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெறப்பட்டு, மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை வழங்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கவில்லை. அடிக்கடி மின்மாற்றியில் வெடித்து, தீப்பொறி பறப்பதினால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இந்த இடத்தில் சாலையை கடக்கின்றனர். இதனால் பல தொழில்கள் பாதிக்கப்படுகிறது. பொதுமக்களின் உயிர் நலன் கருதி, மின்மாற்றியை இடம் மாற்றிக் கொடுக்க வேண்டும்.

மேலும், காவல் நிலையத்திலிருந்து கத்தேரி பிரிவுவரை சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்றி சாலையின் ஓரமாக அமைக்க வேண்டி உதவி செயற்பொறியாளர் இயக்குதலும் மற்றும் பேணுதலும்

அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி சார்பாக மனு வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

படவிளக்கம் : 

குமாரபாளையம் சேலம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மின் மாற்றியை இடம் மாற்றம் செய்ய வேண்டி, மின்வாரியத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Similar News