குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் போலீசில் மனு

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் போலீசில் மனு கொடுக்கப்பட்டது.;

Update: 2021-11-03 08:30 GMT

குமாரபாளையம் காவல் நிலையத்தில் கமல் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ் ஆலோசனை படி, குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர செயலர் சரவணன் தலைமையில் கமலஹாசன் பிறந்தநாள் விழா கொண்டாடுவது தொடர்பாக அனுமதி கேட்டு குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவியிடம் மனு கொடுக்கப்பட்டது.,

இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் விழா நவ. 7ல் வரவிருப்பதையொட்டி 33 வார்டுகளிலும் கொடியேற்று விழா, இனிப்பு வழங்குதல், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

சின்னப்பநாயக்கன்பாளையம் சந்தைபேட்டை, பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காலனி ஆஸ்பத்திரி அருகில் ஆகிய இடங்களில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கு ஒலிபெருக்கி வைத்து நடத்திகொள்ள அனுமதிக்க வேண்டுகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாவட்ட துணை செயலர் சிவகுமார், மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, ரேவதி, வட்ட செயலர்கள், விஜயகுமார், யோகராஜ்,உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News