வாக்காளர் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க உதவிய மக்கள் நீதி மய்ய மகளிர்
வாக்காளர் சிறப்பு முகாமில் மக்கள் நீதி மைய மகளிரணியினர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து உதவினர்.;
குமாரபாளையத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் மக்கள் நீதி மைய மகளிரணியினர் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுத்து பொதுமக்களுக்கு உதவினார்கள்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று வாக்காளர் சிறப்பு முகாம்நடைபெற்றது. குமாரபாளையத்தில் நடைபெற்ற முகாமில் வாக்காளர் பெயர்கள் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல், உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
இதில் மக்கள் நீதி மய்யம் நகர மகளிரணி செயலர் சித்ரா, நிர்வாகிகள் ரேவதி, உஷா உள்ளிட்ட பலர் பங்கேற்று, இதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்காக பூர்த்தி செய்து கொடுத்து உதவினர்.