குமாரபாளையத்தில் இறந்த நகர செயலரின் தாயாரால் மநீம அலுவலகம் திறப்பு
உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஒன்றாக இறந்த நகர செயலரின் தாயாரால் மக்கள் நீதி மய்யம் அலுவலகம் திறக்கப்பட்டது.;
உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஒன்றாக இறந்த நகர செயலரின் தாயாரால் மக்கள் நீதி மய்யம் அலுவலகம் திறக்கப்பட்டது.
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் நகர செயலர் சரவணன் சில நாட்கள் முன்பு இறந்தார். உள்ளாட்சி தேர்தல் பணிகள் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், மக்கள் நீதி மய்யம் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, மாவட்ட செயலர் காமராஜ், 12 வது வார்டு வேட்பாளர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.
இறந்த சரவணனின் தாயார் பழனியம்மாள் தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட பொருளர் நந்தகுமார், மகளிரணி நிர்வாகிகள் உஷா, தமிழரசி குத்து விளக்கு ஏற்றி வைக்க சுவாமி படங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது.