குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்ய ஆலோசனை கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.;

Update: 2021-10-17 15:30 GMT

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், கட்சியின் நிறுவனர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா கொண்டாடுதல், அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றுதல், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்குதல், அதிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்தல், முகாம்கள் அமைத்து புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் நகர செயலர் சரவணன், மகளிர் அணி சித்ரா, ரேவதி, உஷா, முரளி, மணிகண்டன், கார்த்திக்,, தனபால், மூர்த்தி உள்படப் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News