மகளிர் உரிமை தொகை விநியோக பயிற்சி முகாம்

குமாரபாளையத்தில் மகளிர் உரிமைத் தொகை விநியோக பயிற்சி முகாம் நடந்தது.;

Update: 2023-07-13 16:45 GMT

மகளிர் உரிமைத்தொகை விநியோகிப்பதையு தொடர்பாக நடந்த பயிற்சி.

குமாரபாளையத்தில் மகளிர் உரிமைத்  தொகை விநியோக செய்வதற்கான பயிற்சி முகாம் நடந்தது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக வீடு வீடாக விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளன. ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் இதற்காக மொத்தம் 20 ஆயிரம் தன்னார்வலர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் வழங்கும் பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் நடந்தது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் indha பயிற்சியில் பங்கேற்றனர். இவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் இதற்கான பயிற்சி வழங்கினர். இதில் குமாரபாளையம், பள்ளிபாளையத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இவர்கள் ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கு சென்று பொதுமக்களுக்கு பயிற்சி வழங்குவார்கள்.

மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் சேகரிக்க சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக திட்டத்தின் சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News