குமாரபாளையம் அருகே சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகள்
குமாரபாளையம் அருகே சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.
குமாரபாளையத்தில் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இது ஊரடங்கு காரணமாக பல நாட்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் இருந்தது.
இதனால் புல், பூண்டுகள், செடிகள் அதிகம் வளர்ந்து புதர் போல் ஆனது. இது காண்போரை முகம் சுளிக்க வைப்பதாக இருந்ததால், இந்த பூங்காவில் உள்ள புதர்களை அகற்றும் பணியில் ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். புதர்கள் அகற்றப்பட்ட பின் பூங்கா எழிலாக காட்சியளிக்கிறது.