குமாரபாளையத்தில் நாளை மறுநாள் காளியம்மன் கோவில்களில் மகா குண்டம், பூ மிதித்தல்

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மார்ச் 9ல் மகா குண்டம் மற்றும் பூ மிதித்தல் விழா நடைபெறுகிறது.;

Update: 2022-03-07 15:30 GMT

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், மகா குண்டம் பூ மிதித்தல் விழாவையொட்டி மார்ச். 8ல் சக்தி அழைப்பு, தேர்கலசம் வைத்தல், மார்ச். 9ல் மகா குண்டம் பூ மிதித்தல், மார்ச். 10ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச். 11ல் தேர்த்திருவிழா மற்றும் வாண வேடிக்கை, அம்மன் அலங்கார திருவீதி உலா, மார்ச். 12ல் மஞ்சள் நீர் திருவீதி உலா, மார்ச். 13ல் ஊஞ்சல் விழா ஆகிய திருவிழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து விழா ஆலோசனைக் குழு தலைவர் ரகுநாதன் கூறுகையில், இந்த ஆண்டு வண்டி வேடிக்கை நிகழ்வில் 10 அலங்கார வண்டிகள் பங்கேற்க உள்ளதாக  அவர் தெரிவித்தார்.

குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் காளியம்மன் கோவிலில் மார்ச். 1ல் மறு பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

மார்ச். 8ல் சக்தி அழைப்பு, மார்ச். 9ல் மகா குண்டம் பூ மிதித்தல், மார்ச். 10ல் மஞ்சள் நீர் திருவீதி உலா ஆகிய திருவிழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. திருவிழாவையொட்டி மூன்று நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

Tags:    

Similar News