மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் ஆரம்பம் அமைப்பினர் 25 கிலோ அரிசி வழங்கல்
குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் ஆரம்பம் அமைப்பினர் 25 சிப்பம் அரிசி வழங்கி உதவினர்.;
குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் ஆரம்பம் அமைப்பினர் 25 சிப்பம் அரிசி வழங்கி உதவினர்.
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் அமைப்பினர் கல்வி உதவி தொகை வழங்குதல், பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடத்துதல், கண் தானம் பெற்று தருதல், ரத்த தான முகாம் நடத்துதல், ரத்தம் தேவை படுவோருக்கு உடனே ஏற்பாடு செய்து கொடுத்து உயிர்களை காத்தல் ஆகிய சேவையில் செய்து வருகின்றனர்.
மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், சாதனை செம்மல்களின் பிறந்த நாட்களை அரசு பள்ளியில் கொண்டாடி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கட்டுரை, பேச்சு, ஓவியம் போட்டிகள் வைக்கபட்டு பரிசுகள் வழங்குவது, ஆயிரம் பனை விதைகள் நட்டது, ஆயிரம் மரக்கன்றுகள் வைத்தது, கொரோனா காலத்தில் 8 மாத காலமாக தலா மூன்று வேளையும் 700 நபர்களுக்கு அன்னதானம் வழங்கியது உள்பட பல சேவைகள் செய்து வருகிறார்கள்.
இதன்தொடர்ச்சியாக ஆதரவற்ற 25 மாற்றுத்தினாளிகளின் குடும்பதினர்களுக்கு 25 கிலோ அரிசி மூட்டை வழங்கி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு தட்டான்குட்டை மாற்றுத்தினாளிகள் காலனியில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பழனிவேல் அரிசி சிப்பம் வழங்கி துவக்கி வைத்தார்.