மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் செல்ல தயாராக இருந்த மூவர் கைது, சி.பி.எம். கட்சியினர் இரவில் ஆர்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்திற்கு சென்னை செல்ல தயாராக இருந்த மூவர் கைது செய்யப்பட்டதால் சி.பி.எம். கட்சியினர் இரவில் ஆர்பாட்டம் நடத்தினர்.;
மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் செல்ல தயாராக இருந்த மூவர் கைது, சி.பி.எம். கட்சியினர் இரவில் ஆர்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்திற்கு சென்னை செல்ல தயாராக இருந்த மூவர் கைது செய்யப்பட்டதால் சி.பி.எம். கட்சியினர் இரவில் ஆர்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், இன்று காலை 10:00 மணியளவில், சென்னை கோட்டையை முற்றுகையிட்டு, ஆந்திராவில் கொடுத்து வரும், மாத உதவித்தொகையை போல் உயர்த்திக் கொடுக்க வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக சங்கத்தின் மாவட்ட அமைப்பாளரும், சி.பி.எம். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான முருகேசன் தலைமையில் பலர் சென்னை செல்ல தயாராக இருந்தனர். பள்ளிபாளையம் சாலை, மேம்பாலம் பகுதியிலிருந்து புறப்பட தயாராக இருந்த நிலையில், நேற்று இரவு 08:30 மணியளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குமாரபாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, இவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது, சி.பி.எம். கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, கைது நடவடிக்கையை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர். போலீசார் சமரசம் பேசி, முருகேசன், 52 மற்றும் சங்க உறுப்பினர்கள் கனகராஜ், 44, ஆறுமுகம், 45, ஆகிய மூவரை கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
படவிளக்கம் :
மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்திற்கு சென்னை செல்ல தயாராக இருந்த நிலையில், குமாரபாளையத்தில் மூவர் கைது செய்யப்பட்டதால் சி.பி.எம். கட்சியினர் இரவில் ஆர்பாட்டம் நடத்தினர்.