சாய ஆலையில் மரம் வெட்டும் தொழிலாளி பலி
சாய ஆலையில் புகை போக்கி உடைந்து விழுந்த சம்பவத்தில் மரம் வெட்டும் தொழிலாளி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை.;
சேலம் மாவட்டம், தேவூர் அருகே செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், 50, மரம் வெட்டும் தொழிலாளி. இவர் டிராக்டர் உதவியுடன் பெரிய மரங்களை வெட்டி கொடுக்கும் பணியை பல சாயப்பட்டறைகளுக்கு செய்து கொடுத்து வந்தார். நேற்று குமாரபாளையம் பவர் ஹவுஸ் எதிரில், ராயல் ப்ராசஸ் எனும் சாய ஆலையில் டிராக்டர் உதவியுடன் மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தை தாங்காமல் அங்கிருந்த உயரமான புகை போக்கி உடைந்து, மாரியப்பன் தலைமேல் விழுந்தது. இதனால் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் இவர் பலியானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.