குமாரபாளையத்தில் நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்தவர் கைது
குமாரபாளையத்தில், நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.;
குமாரபாளையம் பெராந்தார் காடு பகுதியில், நூதன முறையில் மொபைல்போன் மூலம், லாட்டரி விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று காலை 11:00 மணியளவில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற போலீசார், அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்தனர்.
மேலும், அவரிடம் இருந்த மூன்று எண்கள் எழுதப்பட்ட, நான்கு வெள்ளை துண்டு சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ, 32, என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், கைது செய்து மேலும் விசாரிக்கின்றனர்