முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் வேலி கற்கள் சரிந்து தொழிலாளி இரு கால்களும் சேதம்
குமாரபாளையம் அருகே முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் வேலி கற்கள் சரிந்து தொழிலாளி இரு கால்களும் சேதமானது.;
முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் வேலி கற்கள் சரிந்து தொழிலாளி இரு கால்களும் சேதம்
குமாரபாளையம் அருகே முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் வேலி கற்கள் சரிந்து தொழிலாளி இரு கால்களும் சேதமானது.
சென்னையிலிருந்து கேரளா நோக்கி ரப்பர் லோடு ஏற்றியவாறு லாரி ஒன்று, குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில், நேற்று மாலி சிவசக்தி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. லாரியை ஆத்தூரை சேர்ந்த சுரேஷ், 62, ஓட்டி வந்தார். இதன் பின்னால் நிலங்களுக்கு வேலி அமைக்கும் 8 அடி உயரம் கொண்ட கற்கள் லோடு ஏற்றியவாறு, சங்ககிரியிலிருந்து நசியனூர் நோக்கி சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தை நசியனூரை சேர்ந்த இளவரசன், 27, என்பவர் ஓட்ட, வேலி கற்கள் மீது நசியனூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார், 51, என்பவர் அமர்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் லாரி ஓட்டுனர் திடீரென்று ப்ரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் சரக்கு வாகனம் லாரியின் பின் பகுதியில் மோதி, சரக்கு வாகனத்தின் முன் பகுதி முழுதும் சேதமானது. பின்னால் கற்களின் மீது அமர்ந்து வந்த தொழிலாளி குமார் கால்கள் மீது, கற்கள் சரிந்து விழுந்ததில், இரு கால்களும் பலத்த சேதமானது. குமாரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் அருகே முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் வேலி கற்கள் சரிந்து தொழிலாளி இரு கால்களும் சேதமானது.