குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த லாரி ஓட்டுநர் தலைமறைவு: போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த லாரி ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
குமாரபாளையம் பூசாரிக்காடு பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார், 29. லாரி ஓட்டுனர். இவர் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்து, எஸ்.ஐ. மலர்விழி மற்றும் போலீசார் மாலை 04:00 மணியளவில் நேரில் சென்றனர்.
போலீசார் வருவதையறிந்ததும் அவர் தலைமறைவானார். அவரது வீட்டில் போலீசார் தேடியதில் குளியல் அறையில் 200 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.