'மவுசு' போன பழைய மாடல் விசைத்தறி : பழைய இரும்புக்கடைக்கு பயணமாகும் சோகம்

ஜவுளி நூல் விலை உயர்வு மற்றும் நவீன விசைத்தறிகள் வருகையால் பழைய மாடல் தறிகள் பழைய இரும்பு கடைக்கு எடைக்கு விற்கப்பட்டு வருகின்றன.

Update: 2021-07-11 01:51 GMT

பள்ளிபாளையம் பாலம் சாலையில் செயல்பட்டு வரும் பழைய இரும்பு கடையில் பழைய மாடல் விசைத்தறி உதிரிபாகங்கள் இருப்பதை படத்தில் காணலாம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் செயல்படும் பழைய இரும்புக் கடைகளுக்கு பழைய மாடல் விசைத்தறிகள் அதிகளவில் எடைக்கு போடப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து விசைத்தறி தொழில் நடத்தும் உரிமையாளர் ஒருவர்  "இன்ஸ்டாநியூஸ்"இணையதள செய்தி நிறுவன செய்தியாளரிடம்   கூறிய போது:-

கடந்த சில வருடங்களாகவே விசைத்தறி தொழில்கள் மிகுந்த. சிரமைத்தை சந்தித்து வருகிறது. இந்த  நிலையில்,சந்தையில் விசைத்தறி ஜவுளி நூல்கள் தொடர் விலை ஏற்றம், ஊரடங்கு விசைத்தறிகள் முடக்கம், விசைத்தறிகள் இயக்குவதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை, அதிநவீன விசைத்தறிகள் உருவாக்கம்,உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாங்கள் பயன்படுத்தி வந்த பழைய மாடல் விசைத்தறிகளுக்கு மவுசு இல்லாமல் போய்விட்டது.

அதனால் இந்த பழைய மாடல் விசைத்தறி வைத்துள்ள உரிமையாளர்கள் விற்பனை செய்வதற்கும் வழியில்லை. யாரும் வாங்க முன்வரமாட்டார்கள். அதைக் காட்டிலும், எடைக்குப் போடுவதால் கணிசமான தொகை கிடைக்கிறது. அதனால்  ஏராளமான விசைத்தறி உரிமையாளர்கள் தங்களுடைய பழைய மாடல் தறிகளை எடைக்குப் போட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News