டெம்போவில் குப்பை கழிவுகளை கொட்ட வந்த நபர்கள்: சிறைபிடித்த பொதுமக்கள்
குமாரபாளையம் அருகே டெம்போவில் குப்பை கழிவுகளை கொட்ட வந்த நபர்களை ஊராட்சி துணை தலைவர் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.;
குமாரபாளையம் அருகே சவுதாபுரம் பகுதியில் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் இறைச்சி கழிவுகள், பழைய இரும்பு கழிவுகள், குப்பை கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகளை கொட்டி வந்தனர்.
நேற்று இரவு 08:30 மணியளவில் டெம்போவில் கொண்டுவந்த கழிவு மூட்டைகளை கொட்டும் போது, ஊராட்சி துணை தலைவர் சுதா லோகநாதன் மற்றும் பொதுமக்கள் அவர்களை சிறை பிடித்தனர். இது குறித்து வெப்படை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. இந்த வண்டியில் வந்த சில நபர்களையும் சிறை பிடித்தனர்.