வேட்புமனுக்கள் பெற குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் ஆயத்தம்
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தமிழக அரசின் உத்திரவின்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல், வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. இதற்காக குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், வார்டு வாரியாக எந்தெந்த பகுதி பொதுமக்கள், எங்கே வேட்புமனு தாக்கல் செய்வது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வார்டு 1 முதல், 11 வரை நகரமைப்பு ஆய்வாளர் இயற்கை பிரியன் வசமும், வார்டு 12 முதல், 22 வரை நகராட்சி மேலாளர் சண்முகம் வசமும், வார்டு 23 முதல் 33 வரை உதவி பொறியாளர் செந்தில்குமார் வசமும் வேட்புமனுக்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.