குமாரபாளையத்தில் விருப்ப மனு வழங்கிய தி.மு.க.வினர்
வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட, குமாரபாளையம் தி.மு.க. சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலர் மூர்த்தி அறிவுறுத்தல்படி, குமாரபாளையம் நகர் மன்றத்திற்கு, வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்களுக்கு, விருப்பமனு வழங்கும் நிகழ்வு, நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் குமார் பங்கேற்று, வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பும் நபர்களுக்கு விருப்பமனு வழங்கினார்.
மாவட்ட பொருளாளர் குமார் கூறுகையில், திமுகவினர் 10 ரூபாய் கொடுத்து மனுவினை பெற்றுக் கொள்ளலாம். நகரமன்ற உறுப்பினர் பதிவிக்கான சுயவிபரங்களை நிரப்பிய பின்னர், மனுவோடு 5 ஆயிரம் ரூபாய், பெண்கள் வார்டுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும் நகர தி.மு.க. அலுவலகத்தில் நவ.22ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றார்.