அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது: 100 பாட்டில்கள் பறிமுதல்
குமாரபாளையம் அருகே, அனுமதி இல்லாமல் மது விற்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர்; 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி, போலீசார் பிரபாகரன், திருமலைவாசன் ஆகியோர், வட்டமலை பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள கோழிக்கடை ஒன்றில், மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்து. நேரில் சென்று பார்த்த போது அங்கு மது விற்கப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, மதுவிற்பனையை கையும் களவுமாக கண்காணித்து பிடித்த போலீசார், அங்கு பணியாற்றிய இப்ராகிம், 29, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், அதே பகுதியில் உள்ள மற்றொரு கோழிக்கடையில், மது பாட்டில்கள் விற்பது தெரியவந்து, அந்த கடையின் உரிமையாளர் பெருமாள், 50, என்பவரை கைது செய்துனர். அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 100 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.