அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது - 60 மது பாட்டில்கள் பறிமுதல்

குமாரபாளையத்தில், இரு இடங்களில் அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்; 60 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2021-11-23 05:00 GMT

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்டிக்கடையில்,  மது விற்பதாக தகவல் கிடைத்து. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், எஸ்.ஐ. க்கள் மலர்விழி, சேகரன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். பெட்டிக்கடை வைத்திருக்கும் சுந்தர்ராஜ், 65, என்பவர் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்றதை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவரிடம் இருந்து 48 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போல் குமாரபாளையம் சரவணா தியேட்டர் அருகே,  மது விற்று கொண்டிருந்த கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த பூமணி, 26, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

Tags:    

Similar News