அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 61 பாட்டில்கள் பறிமுதல்

பள்ளிபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்றவர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து 61 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2021-11-10 04:30 GMT

கோப்பு படம்

நாமக்கல் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில், சட்டவிரோதமாக,   அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையிலான போலீசார்,  நேரில் சென்று பார்த்த போது, அங்கு அதிக விலைக்கு ஒரு நபர் மது பாட்டில்களை விற்றுகொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரணை செய்த போலீசார், அவரிடம் இருந்து 61 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் ராமன், 51, என்பதும் தெரியவந்தது. பள்ளிபாளையம் போலீசார் இவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News