கள்ளச்சாராயத் தீமை: குமாரபாளையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
குமாரபாளையத்தில் கள்ளச்சாராயத் தீமை குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சி நடைபெற்றது.;
கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சி, குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் தாசில்தார் தமிழரசி தலைமையில் நடைபெற்றது.
ரேவதி கலைக்குழுவினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள், அதனால் ஏற்படும் செலவினங்கள், நோய் பாதிப்பால் இறப்பு ஏற்படுதல் உள்ளிட்ட பல உதாரணங்களை எடுத்துரைத்து பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். தாசில்தார் தமிழரசி பங்கேற்று, கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர், காவேரி நகர் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டது. இதில் வி.ஏ.,ஒ.முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.