லயன்ஸ் சங்க வழிகாட்டுதல்மேம்பாட்டு பயிற்சி முகாம்

குமாரபாளையத்தில் லயன்ஸ் சங்க வழிகாட்டுதல், மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது

Update: 2022-08-22 16:15 GMT

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற சங்க வழிகாட்டுதல் மற்றும் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பெண்களுக்கு குழந்தைகள் நல பெட்டகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

குமாரபாளையத்தில் லயன்ஸ் சங்க வழிகாட்டுதல்,மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் சங்க வழிகாட்டுதல் மற்றும் மேம்பாட்டு பயிற்சி முகாம் பட்டைய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் தனபால், வட்டார தலைவர் சசிகுமார் சங்க வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைத்தனர்.

மாவட்ட பயிற்றுனர் செந்தில்குமார் சங்க மேம்பாட்டு பயிற்சியினை வழங்கினார். இதில் சுதந்திர தினவிழா கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், குழந்தைகள் நல பெட்டகங்கள் மகளிருக்கும் பரிசாக வழங்கப்பட்டன. சிறந்த சேவை செய்த நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். கண் சிகிச்சை, பொது மருத்துவம், ரத்த தான முகாம்கள் நடத்துவது, போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்துவது, ஆதரவற்றோர் மையத்திற்கு மாதம் தோறும் அரிசி வழங்குதல் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குழு உறுப்பினர் கோபி, சங்க தலைவர் மாதேஸ்வரன், செயலர் கோகுல்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்



Tags:    

Similar News