குமாரபாளையத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்க 23வது பொதுக்குழு கூட்டம்
குமாரபாளையத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்க 23வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் நடைபெற்ற எல்.ஐ.சி. முகவர்கள் சங்க 23வது பொதுக்குழு கூட்டத்தில் சேலம் கோட்ட பொது செயலர் அமுதன் பேசினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்க 23வது பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் கோட்ட முகவர் இளையப்பன், பொது செயலர் அமுதன் பங்கேற்று பேசினார்கள்.
இதில் பாலிசிதாரர் செலுத்தும் தவணைத் தொகை மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். பாலிசி கடன் வட்டி தொகையை குறைக்க வேண்டும். பாலிசிதாரர்களுக்கு போனஸ் அதிகமாக வழங்க வேண்டும். முகவர்களுக்கு குழு இன்சூரன்ஸ், பணிக்கொடை, மற்றும் முகவர் ரினிவல் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோட்டப்பேரவை நிர்வாகிகள் மகேந்திரன், மாணிக்கம், ரமேஷ்பாபு, குழந்தைவேல் குமாரபாளையம் சங்க நிர்வாகிகள் சிலம்பரசன், தனசேகரன், சண்முகம், பசுபதி, ஜோதிமுருகன் உள்பட முகவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.