குப்பாண்டபாளையத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

குமாரபாளையம் அருகே பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.;

Update: 2022-03-17 12:45 GMT

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் அரசு பள்ளியில் நடைபெற்ற வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில் ஊராட்சி தலைவர் கவிதா பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கினார்.

குமாரபாளையம் அருகே பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் கலைஞர் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் கலைஞர் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி தலைவர் கவிதா தலைமையில் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி, முன்னாள் வட்டார மருத்துவ அலுவலர் செந்தாமரை உள்ளிட்ட 16 டாக்டர்கள், 36 நர்ஸ்கள் பங்கேற்றனர். ரத்த அழுத்தம், ரத்த வகை கண்டறிதல், கண், காது, மூக்கு தொண்டை, இருதயம், சர்க்கரை நோய், குழந்தை சிகிச்சை, கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை உள்ளிட்ட பல வகையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர், பூலக்காடு, டீச்சர்ஸ் காலனி, குளத்துக்காடு, உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். மருந்து, மாத்திரைகள், பிறந்த குழந்தைகளுக்கான பரிசு பெட்டகங்கள் தாய்மார்களிடம் இலவசமாக வழங்கப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன், பி.டி.ஏ. பொருளர் வாசுதேவன், நிர்வாகி ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News