JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சதுரங்க விளையாட்டு போட்டிகள்!

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 20ம் தேதி நடைபெறவுள்ள சதுரங்க விளையாட்டு போட்டிகள்!

Update: 2023-07-18 11:37 GMT

ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி குமாரபாளையம் - 638 183, நாமக்கல் வட்டம்

இளையோர் சங்கம் - முன் அறிக்கை

நிகழ்வின் தலைப்பு : “சதுரங்கம் விளையாடுவோம்"

நிகழ்விடம் : ஜே.கே.கே.டராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நிகழ்ச்சி நடக்கும் தேதி : ஜூலை 20, 2023

நிகழ்ச்சி நடக்கும் நேரம் : காலை 11 மணி, வியாழக்கிழமை

முன்னிலை : ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புல முதன்மையர் மற்றும் பொறுப்பு முதல்வர் முன்னிலையில்

சிறப்பு விருந்தினர் : முனைவர்.வே. அனிதா உடற்கல்வி இயக்குநர்,

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் 638 183.

பங்குபெறுவோர் விவரம் : ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகள்


நிகழ்வின் முக்கியத்துவம்:

சதுரங்க விளையாட்டு ஒரு சிறந்த தன்னம்பிக்கை ஊக்கி. அனைத்து மாணவ செல்வங்களும் சதுரங்கம் பயில்வதன் மூலம் அவர்கள் எதிர்கால வாழ்வு மேம்படும். மூளை செயல்திறன் அதிகரிக்கும். சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகள், சதுரங்கம் விளையாடுவதின் மூலம் மறதிக் கோளாறு நோய்கள் மற்றும் நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் அறிவாற்றல் இழப்பு ஆகிய நோய்கள் உண்டாவதிலிருந்து காக்கிறது என நிரூபித்துள்ளனர். சதரங்கம் விளையாடுவதால் மாணவர்களுக்கு திட்டமிடல், மனதை ஒருமுகப்படுத்துதல், நினைவாற்றல் மற்றும் நுண்ணறிவை வளர்ச்சியடையச் செய்கிறது. இதன் மூலம் மனம் ஒரு நிலையில் ஒருமுகப்படும். மேலும் மாணவர்களுக்கு சுய கட்டுப்பாட்டுத் தன்மை, கணிதம் மற்றும் தீர்வு அறியும் திறள் அதிகரிக்கும்.

வளர்ச்சி இலக்கு:

உலக சதுரங்க தினம் நிலையான வளர்ச்சி இலக்குகளை மேம்படுத்துவதற்கும் முக்கியமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் தரமான கல்வி, பாலின சமத்துவம், ஏற்றத்தாழ்வின்மை, அமைதி, நிதி மற்றும் வலுவான நிறுவனங்கள் உருவாகுவதற்கும் இது வழி வகுக்கிறது.

சான்றிதழ் வழங்குதல்:

வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெறும்.

நன்றியுரை :

"சதுரங்கம் விளையாடுவோம்" நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களால் நன்றியுரை வழங்கப்படும்.

Tags:    

Similar News