திருச்செங்கோட்டில் இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில் சிபிஎம் -சிபிஐ - சிபிஐ (எம்எல்), விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-06-29 10:30 GMT

அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம். 

மத்திய அரசுக்கு எதிராக சிபிஎம் - சிபிஐ - சிபிஐ (எம்எல்) - விசிக ஆகிய கட்சிகளின் கூட்டு இயக்கம் சார்பில், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் - டீசல் - கேஸ் விலை உயர்வை கண்டித்தும், தொழிலாளர் நல சட்டங்களையும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரியும், கொரோனா கால நிவாரண நிதியாக மாதம் 7,500 விதம் 3 மாதங்களுக்கு வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருச்செங்கோடு நகர சிபிஐ கட்சி செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவேல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிநாராயணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News