குமாரபாளையத்தில் பொதுநல அமைப்பினரின் சொற்பொழிவு நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் பொதுநல அமைப்பின் சார்பில் சொற்பொழிவு நடைபெற்றது.;

Update: 2022-04-17 13:15 GMT

குமாரபாளையத்தில் பொதுநல அமைப்பின் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மதன்குமார் பேசினார்.

குமாரபாளையத்தில் பொதுநல அமைப்பாளர் நரேந்திரன் தலைமையில் மாதம்தோறும் ஆன்மிகம், சமூகம், அறிவியல், பொருளாதாரம், கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

நேற்று வடக்கையும், தெற்கையும் இணைத்தது எது? என்ற தலைப்பில் மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல சீனிவாஸ், எல்லை காக்கும் சாமிகள் என்ற தலைப்பில் பணி நிறைவு பெற்ற ராணுவ அதிகாரி மதன்குமார் பேசினர். நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News