குமாரபாளையத்தில் பெய்த கன மழையால் வீட்டின் மீது சாய்ந்த மரம்
குமாரபாளையத்தில் சுமார் 3 மணி நேரம் நீடித்த கன மழையால் மரம் வேறாடு வீட்டின் மீது சாய்ந்தது.;
குமாரபாளையத்தில் பெய்த கன மழையால் வீட்டின் மீது சாய்ந்த மரம்.
குமாரபாளையத்தில் மாலை 3 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 6 மணிக்கு மேலும் நீடித்தது. பலத்த காற்றும் வீசியதால், விட்டலபுரி பகுதியில் மரம் ஒன்று ஆறுமுகம் என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்தது.
வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவலறிந்த நகராட்சி நிர்வாகத்தினர், தீயணைப்பு துறையினர் நேரில் வந்து சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.