குமாரபாளையத்தில் 2வது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் 2வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-08-28 14:30 GMT

குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 2வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களில் சமஸ்கிருதத்தை நுழைத்து திருத்தி உள்ளனர். இதன் ஷரத்துகள் மக்கள் விரோதமாக இருப்பதால், இதனை திரும்ப பெறக்கோரி, குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று 2வது நாளாக நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் துணை தலைவர் தீனதயாளன், இதே அமைப்பின் துணை செயலாளர் ஐயப்பன், குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் நாகப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News