பள்ளிபாளையம் எல்லை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

பள்ளிபாளையத்தில் உள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;

Update: 2022-03-26 16:30 GMT

பள்ளிபாளையத்தில் உள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பள்ளிபாளையம் அருகே ஜீவா செட் அருகே செல்வா விநாயகர் கோவில், எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா மார்ச் 22ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. காவிரியிலிருந்து தீர்தக்குடங்கள் மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது.

திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பல பகுதியில் இருந்தும் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். சுவாமிகளுக்கு சிறப்பு, அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கபட்டது. விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News