குமாரபாளையம் அருகே பட்டா நில பூங்காவில் இருந்த விளக்கு, ஊஞ்சல் அகற்றம்
குமாரபாளையம் அருகே பட்டா நில பூங்காவில் இருந்த விளக்குகள் மற்றும் ஊஞ்சல்கள் அகற்றப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் சிறுவர் பூங்கா 2 ஆண்டுகள் முன்பு அமைக்கப்பட்டது. இது தற்போது தனியாரின் இடம் என்பது தெரியவந்துள்ளது. நிலத்தின் உரிமையாளர் ஊராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி தனக்கு உரிய நிலத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டி கேட்டுள்ளார். இதனால் பூங்கா செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதால் பூங்காவில் உள்ள வண்ண, வண்ண விளக்குகள், ஊஞ்சல்கள் அகற்றப்பட்டன. இப்பகுதி பொதுமக்களின் பொழுது போக்கு இடமாகவும், காலை நேரத்தில் நடைபயிற்சி செய்வோருக்கு உதவியாகவும் இந்த பூங்கா இருந்து வந்தது. இந்த பூங்கா அகற்றப்படும் நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.