லக்ஷ்மி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழா..!

குமாரபாளையம் அருகே லக்ஷ்மி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2024-05-27 11:30 GMT

லக்ஷ்மி நரசிம்மர்

குமாரபாளையம், லக்ஷ்மி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில், விநாயகர், லக்ஷ்மி நரசிம்மர், ஆஞ்சநேயர், திருமங்கையாழ்வார், ஜய விஜயன், கருடாழ்வார் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில், பெண்கள் மஞ்சள் ஆடையுடன் பெருமளவில் பங்கேற்றனர். நான்கு கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன.

நேற்று காலை 06:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்லக்காபாளையத்தை சேர்ந்த செல்வகபிலன், செந்தில்வேலன் சிவாச்சாரியார்கள் மற்றும் குழுவினரால் யாக சாலை பூஜைகள், கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

பெருமாள் வழிபாடு

பெருமாள் கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரம்மாண்டமாக தெரிவது ராஜகோபுரம். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுரத்தை தரிசனம் செய்தால் இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும். அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றுவார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்திருக்கும். அதனையும் வழிபட வேண்டும். 

Tags:    

Similar News