நெஞ்சு வலியால்
பெண் பலி
குமாரபாளையத்தில் நெஞ்சு வலியால்
பெண் பலியானார்.
குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் தனலட்சுமி, 50. இவருக்கு நெஞ்சுவலி அடிக்கடி வந்ததால், குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மார்ச். 3ல், மாலை 03:30 மணியளவில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால், இவரை பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க, டாக்டர் பரிந்துரை செய்ததின் பேரில், அங்கு அழைத்து சென்றனர். அங்கு சென்ற பின் இவரை பரிசோதித்த பெருந்துறை அரசு மருத்துவமனை டாக்டர், இவர் வும் வழியில் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து இவரது கணவர் அய்யாசாமி, 55, குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இதன்படி, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.