குமாரபாளையத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை
குமாரபாளையத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகரில், தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தவர் ஜெகதீஷ், 25. பிளாஸ்டிக் கதவுகள் பிட்டிங் செய்யும் கூலித்தொழிலாளி. இவரது தாயார் உடல்நலமில்லாமல் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு நாட்களாக ஈரோடு மருத்துவமனையில் இருந்த இவர், வீட்டிற்கு வந்து செல்லலாம் என வந்துள்ளார்.
இதனிடையே, ஜெகதீஷின் மனைவி கவிதா, 21, வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் உள்ளே சேலையால் தூக்கு மாட்டிய நிலையில் தனது கணவரை கண்டு அதிர்ச்சியில் சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து, உடலை இறக்கினர். குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.