குடிப்பழக்கம் உள்ள நபர் வயிற்றுவலியால் பலி
குமாரபாளையம் அருகே குடிப்பழக்கம் உள்ள நபர் வயிற்றுவலியால் பலியானார்.;
குடிப்பழக்கம் உள்ள நபர்
வயிற்றுவலியால் பலி
குமாரபாளையம் அருகே குடிப்பழக்கம் உள்ள நபர்
வயிற்றுவலியால் பலியானார்.
குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஜெகதீசன், 45. கூலி. இவருக்கு திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் காலை 09:00 மணியளவில் வயிற்றுவலி என்றும், தண்ணீர் வேண்டும் என்று கேட்டதால், வீட்டில் உள்ளவர்கள் தண்ணீர் கொடுத்துள்ளனர். உடனே வாந்தி வருகிறது என்று சொன்னதால், பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்க அழைத்து போய் உள்ளனர். இவரை பரிசோதித்த டாக்டர், இவர் வழியில் இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர். இது குறித்து, இவரது மனைவி, சித்ரா, 25, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.