கட்டிடத்தின் மேலே இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
வட்டமலை பகுதியில், கட்டிடத்தின் மேலே இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.;
ஈரோடு மாவட்டம், ஊராட்சி கோட்டை பகுதியில் வசிப்பவர் கந்தசாமி, 70. கட்டுமான தொழிலாளி. இவர் குமாரபாளையம் வட்டமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தார். இவருடன் பலரும் பணி செய்து கொண்டிருந்தனர்.
நேற்றுமுன்தினம் மாலை 03:30 மணியளவில் திடீரென்று கட்டிடத்தின் மேலே இருந்து கீழே தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் வழியில் இவர் உயிரிழந்ததாக டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.