விதி மீறி குட்கா விற்பனை செய்யப்பட்ட கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
குமாரபாளையத்தில் விதி மீறி குட்கா விற்பனை செய்யப்பட்ட கடை அதிகாரிகளால் சீலிடப்பட்டது.;
விதி மீறி குட்கா விற்பனை செய்யப்பட்ட கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
குமாரபாளையத்தில் விதி மீறி குட்கா விற்பனை செய்யப்பட்ட கடை அதிகாரிகளால் சீலிடப்பட்டது.
குமாரபாளையம் தம்மண்ணசெட்டி வீதியில் உள்ள முருகன் டீக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் உத்திரவின் பேரில், அந்த கடையில் உள்ள 1.5 கிலோ பான் மசாலா, குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, கடைக்கு சீலிடப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன், எஸ்.ஐ. தங்கவடிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
படவிளக்கம் :குட்கா விற்பனை செய்யப்பட்ட கடை அதிகாரிகளால் சீலிடப்பட்டது.