குப்பைகள் அகற்றிய குப்பாண்டபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர்
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் சார்பில் குப்பைகள் அகற்றப்பட்டது.;
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் போக்குவரத்து போலீசார் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இதன் அருகில் அப்பகுதியினர் குப்பைகள் கொட்டி வந்தனர்.
இதன் துர்நாற்றத்தால் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. போலீசாரின் பணி செய்ய இடையூறாக இருந்த குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டது. போலீசார் மற்றும் அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.